Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி தனி மாவட்டம் ஆகிறதா ?? அரசு விழாவில் கோரிக்கை .. புன்னகைத்த முதல்வர் ..

முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் எடப்பாடியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் . அதற்கு முதல்வர் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தார் .
 

edapadi to be separate district ?
Author
Tamil Nadu, First Published Aug 19, 2019, 6:03 PM IST

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார் . அதன்படி முதலில் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்தார் . பின்னர் கடந்த மாதம் திருநெல்வேலியில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

edapadi to be separate district ?

சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களை அறிவித்தார் . இன்னும் பல பெரிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடியில்  மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நடந்தது . இதில் முதல்வர் கலந்து கொண்டார் . அப்போது பேசிய எடப்பாடி பார் அசோஸியேஷன் தலைவர் ஆனந்தன் சேலத்தில் இருந்து எடப்பாடியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் . அதற்கான எல்லா தகுதிகளும் எடப்பாடிக்கு இருப்பதாக கூறினார் .

edapadi to be separate district ?

அதை கேட்டதும் முதல்வர்  சிரித்தார் . எனினும் அவர் பேசும் போது அது குறித்து எதுவும் கூறவில்லை .

Follow Us:
Download App:
  • android
  • ios