கண்னத்தில் பளார்: திமுக பிரமுகர் அராஜகம்!
சேலம் மாவட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வியாபாரியை கண்னத்தில் பளார் என அறையும் வீடியோ வைரலாகி வருகிறது
சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். வெள்ளி வியாபாரம் செய்து வரும் இவர், தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் திமுக கொடி கட்டு வந்த அக்கட்சியின் பிரமுகர் ராஜா என்பவர், கண்ணனின் இரு சக்கர வாகனத்தை இடிப்பது போல வந்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்த முதியவர் ஒருவர் அந்த இரு சக்கர வாகனத்தை சற்று தள்ளி வைக்க முயன்றார். அதற்குள்ளாக அங்கு வந்த கண்ணன், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து ஓரமாக நிறுத்தினார். அப்போது, வண்டியை ஓரமாக நிறுத்த மாட்டியா என காரில் வந்த திமுக பிரமுகர் ராஜா ஏகவசனம் பேசியதாக தெரிகிறது.
இதனால், கண்ணன் தனது தலையில் அடித்துக் கொண்டு தனது வேதனையை வெளிப்ப்டுத்தியுள்ளார். இதனை கண்ட ராஜா காரில் இருந்து இறங்கி வந்து என்ன தலையில அடிக்குற என கண்ணனின் கண்ணத்தில் பளார் என ஒரு அறை விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
நாங்குநேரி விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு திருமா வைத்த கோரிக்கை!
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் பலரும், திமுக என்றாலே அராஜகம்தான் எனவும், இதனால்தான் நடுத்தர வர்க்கத்தினர் திமுகவினர் வெறுக்கிறார்கள் எனவும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், சாலையில் இரு புறமும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால் மற்ற வாகனங்கள் எப்படி செல்ல முடியும் என திமுக பிரமுகருக்கு ஆதரவான வாதங்களும் முன் வைக்கப்படுகின்றன.
மேலும், சிசிடிவி கேமிராவில் ஒரு பக்க காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருக்கிறது. அடி வாங்கிய கண்ணன் திமுக பிரமுகரை நோக்கி செல்கிறார். மேலும், பலரும் செல்கின்றனர். இந்த காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதன்பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.