Asianet News TamilAsianet News Tamil

சேலத்தில் ஓடும் பேருந்தில் இறங்க முயன்று தவறி விழுந்த இளம் பெண் தாய் கண் முன்னே துடி துடித்து பலி

சேலம் வாழப்பாடி அருகே ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற இளம் பெண் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

32 year old lady step down from private bus and died in salem district vel
Author
First Published Nov 17, 2023, 11:53 PM IST | Last Updated Nov 17, 2023, 11:53 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராமன்-சின்னபிள்ளை தம்பதிகளின் மகள் சுலோச்சனா (வயது 32). கூலி தொழிலாளி. சுலோச்சினா, அவரது தாய் சின்னபிள்ளை இருவரும் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளனர். அப்போது சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு தனியார் டவுன் பஸ் ஒன்று வந்துள்ளது. 

பெற்றோரின் சித்ரவதை தாங்காமலே வீட்டை விட்டு வெளியேறினேன்; இளம் பெண் பரபரப்பு தகவல்

பஸ் நின்றதும் சுலோச்சனா பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னால் தாய் ஏறியதை கவனிக்காமல் விட்டதாக கூறப்படுகிறது. தனியார் டவுன் பஸ் கிளம்பிய நிலையில் ஓடும் பஸ்ஸில் திரும்பி பார்த்த சுலோச்சனா தாய் சின்னபிள்ளை பஸ் ஏறாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  திடீரென்று ஓடும் பஸ்ஸில் இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதமாக படியிலிருந்து  தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சுலோச்சனா பரிதாபமாக உயரிழந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்கள் வயதான பெண்மணி பஸ் ஏறுவதற்குள் எப்படி பஸ் எடுக்கலாம் என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன சுலோச்சனாவின் உடலை மீட்பு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
         
ஓடும் பஸ்ஸில் இளம்பெண் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios