அடங்காமல் வாகனங்களில் சுற்றி அட்டகாசம்..! தமிழகத்தில் 1.75 லட்சம் பேர் கைது.!

தமிழகம் முழுவதும் சுமார் 1,75,000 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது 1,63,477 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

1.75 lakh people arrested for violating lockdown rules in tamilnadu

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு இம்மாத இறுதி வரை நீட்டிக்கபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியா முழுவதும் அதற்கான உத்தரவை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஊரடங்கு உத்தரவால் கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

1.75 lakh people arrested for violating lockdown rules in tamilnadu

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளிவர வேண்டும் என்றும் அதை தவிர்த்து பிற காரியங்களுக்கு எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது என அரசு எச்சரித்து இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.  ஊரடங்கு தற்போது இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனாவின் தீவிரத்தை இன்னும் பலர் உணராமல் சாலைகளில் திரியும் நிலையில் அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

1.75 lakh people arrested for violating lockdown rules in tamilnadu

தமிழகம் முழுவதும் சுமார் 1,75,000 பேர் தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகியுள்ளனர். அவர்கள் மீது 1,63,477 வழக்குகள் போடப்பட்டுள்ளது. 1,39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 68,57,344 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். வீதி வீதியாக சென்று மக்களுக்கு பாதிப்பை எடுத்துக் கூறி அவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதால் நிகழப்போகும் அபாயங்களையும் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios