Asianet News TamilAsianet News Tamil

முதல்வரை ஏமாற்றிய போலி வீல் சேர் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மீது வழக்குப் பதிவு.. எப்படி தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் லண்டனில் நடந்த ஆசிய கோப்பைக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக கூறி கோப்பையுடன் வலம் வந்திருக்கிறார். 

ramanathapuram police case filed against Fake Wheel Chair Indian Cricket Team Captain vinoth babu
Author
First Published Apr 27, 2023, 10:28 AM IST

சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் லண்டனில் நடந்த ஆசிய கோப்பைக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பங்கேற்று கோப்பை வென்றதாக கூறி கோப்பையுடன் வலம் வந்திருக்கிறார். 

இதையும் படிங்க;- வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்! Happy Streets கொண்டாட்டம்! சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.!

ramanathapuram police case filed against Fake Wheel Chair Indian Cricket Team Captain vinoth babu

இந்நிலையில், கோப்பையுடன் வினோத் பாபு அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது, தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த வினோத்பாபு பாகிஸ்தானைத் வீழ்த்தி இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருப்பதாக மகிழ்ச்சியில்  முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றிருக்கிறார். வினோத்பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பன் இருவரும் முதலமைச்சரை உலகக் கோப்பையுடன் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படிங்க;- பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர் கார்த்தி திடீர் தற்கொலை..! சோகத்தில் கிராம மக்கள்.! என்ன காரணம் தெரியுமா.?

ramanathapuram police case filed against Fake Wheel Chair Indian Cricket Team Captain vinoth babu

இந்நிலையில் வினோத்பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி கேப்டன் என்பதும், உலகக் கோப்பையை வென்று சொன்னது அனைத்து பொய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, பேக்கரி உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் வினோத் பாபு மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துதுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios