வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்! Happy Streets கொண்டாட்டம்! சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.!
Happy Streets கொண்டாட்டம் 30.04.2023, 07.05.2023, 14.05.2023 மற்றும் 21.05.2023 ஆகிய தினங்களில் காலை 06.00 மணி முதல் 09.00 மணிவரை நடைபெறுவதை முன்னிட்டு காலை 03.00 மணி முதல் காலை 09.30 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற இருப்பதால், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் GP ரோடு சந்திப்பு வரை அடுத்த 4 ஞாயிற்று கிழமைகளில் மட்டும் காலை 3.30 மணி முதல் 9.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அண்ணாசாலையில் ஸ்பென்சர் சந்திப்பு முதல் G.P ரோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் Happy Streets கொண்டாட்டம் 30.04.2023, 07.05.2023, 14.05.2023 மற்றும் 21.05.2023 ஆகிய தினங்களில் காலை 06.00 மணி முதல் 09.00 மணிவரை நடைபெறுவதை முன்னிட்டு காலை 03.00 மணி முதல் காலை 09.30 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க;- பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர் கார்த்தி திடீர் தற்கொலை..! சோகத்தில் கிராம மக்கள்.! என்ன காரணம் தெரியுமா.?
* அண்ணாசாலையில் திரு.வி.கா. சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு பின்னிசாலை - எத்திராஜ் சாலை - எத்திராஜ் சாலை X மார்ஷல் சாலை சந்திப்பு * மார்ஷல் சாலை- பாந்தியன் ரவுண்டானா ஆதித்தனார் சாலை - சித்ராபாயிண்ட் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அண்ணா சாலையில் ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பின்னிசாலை x E.B.Link ரோடு சந்திப்பில் வலது புறமாக திருப்பப்பட்டு E.B.Link ரோடு டேம்ஸ் சாலை பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* அண்ணா சாலையில் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை x G.P ரோடு சந்திப்பில் இடதுபுறமாக திருப்பப்பட்டு G.P ரோடு - வுட்ஸ் ரோடு - மணிக்கூண்டுசந்திப்பு - ஒயிட்ஸ் சாலைவழியாக அண்ணாசாலை சென்றுதங்கள் இலக்கை அடையலாம்.
* பின்னி சாலையில் இருந்துவரும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடது புறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை.
* G.P ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை X G.P ரோடு சந்திப்பில் வலது புறமாக திரும்பி அண்ணாசாலை அண்ணாசிலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். இடதுபுறமாக திரும்பி செல்ல அனுமதி இல்லை. எனவே மேற்கண்ட சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு பயணத்தை மாற்றி அமைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- 56 வயசுல இதெல்லாம் தேவையா.. 24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டல்.. வக்கிரம் பிடித்த காமக்கொடூர ஆசிரியர்.!