வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை? பட்டியல் இன ஆணைய இயக்குநர் பரபரப்பு தகவல்

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பட்டியல் இன ஆணைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

vengaivayal case should to change to cbi investigation said public vel

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவிவர்மன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேங்கைவயல் வழக்கு திசை மாரி செல்வதாக மக்கள் சொல்கிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி 6 பேரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது‌. அதை வைத்து குற்றவாளிகளை கண்டறிய முடியாது. தண்ணீர் பகிர்வில், தண்ணீர் தொட்டியில் தண்ணீர் திறந்து விடுபவருக்கும், ஊராட்சி தலைவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் இது நிகழ்ந்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனை செய்தால் தீர்வு ஏற்படும் என்று நினைக்கின்றனர். மனித கழிவு கலந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி அறிவியல் சோதனைக்கு ஏற்ற மாதிரிகள் இல்லை. பெரிய அளவிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதர்களால் கலக்கப் பட்டதால் அதிலிருந்து எடுக்கப்படும் மாதிரிகள் உகந்ததாக இல்லை.

மகளிர் இலவசப் பேருந்தில் திடீர் ஓட்டை; ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் பயணி காயம்

டிஎன்ஏ பரிசோதனை மாதிரி முடிவுகள் ஒத்துப் போகவில்லை என்பதற்காக குற்றம் நடக்கவில்லை என்று கூறிவிட முடியாது. சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், பட்டியலின அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகிறார்கள். அதற்கு அறிக்கை அனுப்ப உள்ளோம். இது குறித்து ஆணைய தலைவர் முடிவெடுத்து பரிந்துரைப்பார்.

திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது - எல்.முருகன் விமர்சனம்

இந்த வழக்கில் உண்மை கண்டறியும் சோதனையை ஆணையம் வரவேற்கிறது. ஆனால் அந்த சோதனையை பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது நடத்தக்கூடாது. மக்கள் மனமார வேண்டும் சட்டத்தின் மூலம் சிறிது தான் செய்ய முடியும் கல்வி தான் இதற்கு தீர்வாக அமையும். இது போன்று செயல்படும் மக்கள் மனநோயில் தான் உள்ளார்கள். மக்கள் மனம் மாறினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios