மின்னல் வேகத்தில் பஸ் ஸ்டாப் மீது மோதி கவிழ்ந்த கார்.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!
புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை அருகே பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி 4 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பேருந்து நிறுத்தத்தின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் கவிழ்ந்தது.
இதையும் படிங்க;- Tamilnadu Rain: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- Coimbatore: பிரபல தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு..!
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க..!