Asianet News TamilAsianet News Tamil

புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயம்; தங்க காசை தட்டிச்சென்ற சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பனை தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாகவும், பனை மரத்தின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து கூறும் விதமாகவும் சிறுவர்கள் கலந்து கொண்ட நுங்கு வண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது.

palm tender nut race held well in pudukkottai district
Author
First Published May 20, 2023, 4:28 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு கிராமத்தில் பனை மரம் மற்றும் பனை தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாகவும், பனை மரத்தின் பயன்கள் குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் சிறுவர்களை வைத்து நுங்கு வண்டி பந்தயம்  நடத்தப்பட்டது. 

இந்த போட்டியில் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுடைய 60 சிறுவர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கும் முன் பனைமரம் வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. ஒரு பிரிவுக்கு 30 சிறுவர்கள் என போட்டியில் கலந்து கொண்டனர். 

அரியலூர் ஜல்லிக்கட்டு போட்யில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயற்சித்த காளையர்கள்

போட்டியில் ஆதனூர் விளக்கு வரை போகவர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. போட்டி தொடங்கியவுடன் ஆர்வமாக சிறுவர்கள் சாலையில் நுங்கு வண்டி ஓட்டிச் சென்றனர். நுங்கு வண்டி போட்டியை சாலையில் இருபுறங்களிலும் நின்று ஆராவாரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற சிறுவன் கிருஷ்ணனுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios