மோடிக்கும் ED க்கும் நாங்க பயப்பட மாட்டோம்: கெத்து காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மோடிக்கும் அமலாக்கத்துறைக்கும் திமுக பயப்படாது என்று சூளுரைத்தார்.

DMK will never be scared of Modi and ED, says Udhayanidhi

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக திமுகவினர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆகிய இரண்டு இலாகாக்களும் வேறு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவருகிறார். அவரை அமைச்சரவையில் இருந்தே நீக்க வேண்டும் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரெண்டு நாள் உள்ள தூக்கி போட்டா தாங்குவாரா விஜய்: தயாரிப்பாளர் ராஜன் பேச்சு

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துப் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, மோடிக்கும் பயப்பட மாட்டோம் ED க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம் என்று சவால் விட்டார்.

ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி போன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இதேபோல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிராமணர்களுக்கு புதிய கட்சி... பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும்: எஸ்.வி. சேகர் அறிவிப்பு

"எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவைதான் பாஜகவின் தொண்டர் படை" என்று மத்திய அரசைச் சாடிய உதயநிதி ஸ்டாலின், அமலாக்கத்துறை 18 மணி நேரமாக சோதனை என்ற பெயரில் செந்தில் பாலாஜியைக் கொடுமைபடுத்தி இருக்கிறது என்றும் குறை கூறினார்.

2019, 2021ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களைப் போலவே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை நீக்கப்பட்டது முதல்வர் மு. க. ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் என்று சொன்னதுடன், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

உங்க கட்சிக்காரங்க இவ்வளவு கீழ்த்தரமா பேசுவாங்களா? ஸ்டாலினை குறிவைத்து விளாசிய அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios