புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு!

புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்

Ammonia gas leak in Pudukkottai tn govt Aavin company

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து தினந்தோறும் 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, குளிரூட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட தேவைக்கு மட்டுமல்லாமல் சென்னைக்கும் அனுப்பப்படுகிறது.

இது தவிர ஆவின் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் இங்கு தயாரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் வழக்கம் போல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் பதப்படுத்தப்பட்டு, குளிரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, பால் குளிரூட்டும் குழாயில்  திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சடைப்பு ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவசர அவசரமாக அலறி அடித்து அங்கிருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு கலசங்களை அணிந்து தற்போது அமோனியா வாயு கசிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஜோராக நடைபெறும் விபசாரம்; 3 பெண்கள் மீட்பு

அமோனியா வாயு கசிவை சுவாசித்தால் நுரையீரல் கோளாறு ஏற்படும் என்றும், மூச்சடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அமோனியா வாயு உணரப்பட்டு வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அமோனியா வாயுக் கசிவை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் உடனடியாக வெளியேறினார். மீதம் உள்ள வீரர்கள் தற்போது உள்ளே சென்றுள்ளனர். விரைவில் அமோனியா வாயு கசிவை சரி செய்யா விட்டால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கசிவு ஏற்படும்போது பணியில் இருந்த பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் தான் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரம் தெரியவரும். அதேசமயம், இன்று மாலைக்குள் சரி செய்யப்படா விட்டால் கொள்முதல் செய்யப்பட்ட பால் கெடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios