திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஜோராக நடைபெறும் விபசாரம்; 3 பெண்கள் மீட்பு
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், அங்கிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையான கண்டோன்மெண்ட் பகுதியில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபசாரம் நடத்தப்படுவதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து திருச்சி திருவெறும்பூர் மூன்றாவது தெரு அடைக்கல அன்னை நகர் பகுதியைச் சேர்ந்த விவேக் கிருஷ்ணன் (வயது 29)என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்
மேலும் அவரது பிடியில் இருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயது அழகி மற்றும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த 38 வயது பெண், திருச்சி இடுமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் மீட்டனர். அவர்கள் வசம் இருந்து 5 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு