பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை - பொன்.ராதாகிருஷ்ணன்
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கு தான் பெருமை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க நிறைவு கூட்டத்தில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வருகை புரிந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சி சாதனை கூட்டம் முடிந்த பிறகு புதுச்சேரியில் பாஜக புது எழுச்சி பெறும்.
தம்மை கைது செய்த போது கருணாநிதி மிகவும் தைரியமாக இருந்தார் - எம்.பி. வில்சன் பேச்சு
புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். உலகத்திற்கே வழிகாட்டும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை. நரேந்திர மோடி எங்கு போட்டியிட வேண்டும் என்பதனை பாஜக தலைமை முடிவு செய்யும்.
கலைஞர் கைது செய்யப்பட்ட போது நாயை விட மோசமாக நடத்தப்பட்டார் - நீதிபதி பரபரப்பு பேச்சு
அவர் போட்டியிடும் தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதற்கு காசியும், வாரணாசியும் ஒரு உதாரணம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் பிரச்சினைகள் தேவையில்லாத ஒன்று. சண்டை போட்டு தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது. ஆளுநர் ஆர். என். ரவி திமுகவிற்கு கட்டுப்பட்டு நடக்க அவர் ஒன்றும் திமுக உறுப்பினர் அல்ல. சட்டமன்ற உறுப்பினரும் அல்ல. அவர் ஒரு ஆளுநர். அரசியலமைப்பு சட்டப்படி அவர் நடந்து கொள்வார். அவருக்கு கருப்பு கொடி காட்டுபவர்களுக்கு கருப்பு நெருங்கி விட்டது என்று தெரிவித்தார்.