Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் முதல்வன் பாணியில் ஒருநாள் தலைமை ஆசிரியை; அரசுப்பள்ளியில் அதிரடி ஆய்வு செய்த மாணவி

புதுக்கோட்டையில் மாணவிகளிடையே தலைமைப் பண்பை மேம்படுத்தும் விதமாக அரசுப்பள்ளி ஒன்றில் சிறப்பாக படிக்கும் மாணவியை ஒருநாள் தலைமை ஆசிரியையாக பணியமர்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A student of Pudukkottai Government School worked as headMaster for one day vel
Author
First Published Jun 27, 2024, 11:26 AM IST

மாணவ, மாணவிகள் பள்ளிப்பருவத்தில் இருந்தே தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமை பண்பில் உள்ள குறைபாடுகள் எவ்வாறு களைய வேண்டும், தங்களுக்கு அந்தப் பணியில் உள்ள சிரமங்கள், நன்மைகள் ஆகியவற்றை அறிந்து அதற்கு ஏற்றார் போல தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசும், ஆசிரிய சமுதாயத்தினரும் பல்வேறு வகையான பாடங்கள் மற்றும் போதனைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே போய் முன்னுதாரணமாக பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுத்து அவருக்கு பணி நியமன ஆணையும் அளித்து அவரை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து ஆசிரியர் சமுதாயத்தினர் அழகு பார்த்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. 

சென்னையில் சர்வதேச போதை கும்பல்? விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளி பருவத்திலேயே தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்காட்டும் விதமாக பள்ளியில் நன்றாக படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வரும் மாணவியாக விளங்கும் 11ம் வகுப்பில்  பயாலஜி படித்து வரும் மாணவி மெய் வர்சிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து அவரை இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியராக அறிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி அவருக்கு ஒரு பணியானையை அளித்து  பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில்  ஆசிரியர்கள்  மாணவிகள் ஆகியோர் வாழ்த்து கூறி அவரை அழைத்து வந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தனர். அவருக்கு தலைமை ஆசிரியராக இருக்கும் தமிழரசி சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர். இதைத் தொடர்ந்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவி மெய் வர்சிதா இன்றைய வருகை பதிவேடு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுடன் வகுப்பறைக்கு சென்று மாணவிகளுடன் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள மாணவி மெய் வர்ஷிதா கலந்துரையாடி ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான் இன்று நம் பள்ளியில் பணியாற்றி வருகிறேன். உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள் நான் ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறி அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறேன். மேலும் நானே ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட  நிலையில் நீங்களும் அடுத்தடுத்து இதுபோன்று வாய்ப்புகளை பெற வேண்டும் என்று மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?

மாணவி ஒருவரையே ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணியமர்த்தி அவரை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவர்களுக்கு அந்த பணியின் முக்கியத்துவம் மட்டும் அல்லாமல் அந்த பணியில் உள்ள சிரமங்கள் உள்ளிட்டவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்களுடைய தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இது போன்ற முயற்சி எடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios