Asianet News TamilAsianet News Tamil

புதுக்கோட்டை நாட்டு வெடி பட்டறையில் தீ விபத்து! இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமான கட்டிடம்!

ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து வேகமாக வீசிய காற்றில் மளமளவென பட்டறை முழுவதும் பரவிவிட்டது. அப்போது பட்டறையில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

A fire broke out in a country explosives making workshop near Pudukottai!
Author
First Published Jul 30, 2023, 10:23 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்குடியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறி கட்டிடம் இடித்து தரை மட்டமாகியுள்ளது.

புதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த வைரமணி என்பவர் பூங்குடி ஊராட்சியில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையை நடத்திவருகிறார். கிராமத்திற்கு வெளியே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பட்டறையை அவர் 10 ஆண்டுகளாக நடத்தி வருவதாகத் தெரிகிறது.

மண் அள்ளி செல்ஃபி எடுங்கள்! சுதந்திர தினம் கொண்டாட புதுசா ஐடியா கொடுக்கும் பிரதமர் மோடி

இவர் முறையான உரிமம் பெற்று நாட்டு வெடி தயாரிப்பை குடிசை தொழிலாக நடத்திவந்தார் எனவும் கோயில் மறுறம் திருமண விழாக்களில் வெடிக்கப்படும் நாட்டு வெடிகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்தார் எனவும் சொல்லப்படுகிறது. இவரது பட்டறையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

A fire broke out in a country explosives making workshop near Pudukottai!

இந்நிலையில் ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து வேகமாக வீசிய காற்றில் மளமளவென பட்டறை முழுவதும் பரவிவிட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்து பட்டறைக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். விபத்தின்போது பட்டறையில் இருந்த உரிமையாளர் உள்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பட்டறையின் உரிமையாளர் வைரமணி, தொழிலாளர்கள் குமார், திருமலை, வீரமுத்து, சுரேஷ் ஆகிய ஐந்து பேரின் உடலிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுமுறை எடுத்துச் சென்ற ராணுவ வீரர் மாயம்... ஜம்மு காஷ்மீரில் தேடும் பணி தீவிரம்

Follow Us:
Download App:
  • android
  • ios