தமிழகத்தில் ஷாக்கிங் நியூஸ்.. டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. எப்படி தெரியுமா?
டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது.
கழுத்துப் பகுதியில் டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண வண்ண டாட்டூக்கள் இன்றைய இளம் தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்துக்கொண்டால் அதை அழிக்கவே முடியாது, உடலோடு கலந்துவிடும் என்ற நிலையும் இப்போது மாறிவிட்டது.
இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில், தமிழகத்தில் டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் பரத்(22). இவர் தனது நண்பர்களுடன் 20 நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பரத் புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூவாக குத்தியுள்ளார்.
பின்னர் சொந்த ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டூ குத்திய இடத்தில் கட்டி உருவாகி கடுமையான வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் பரத்தை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றினர். இதனையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க;- குட்நியூஸ்... செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.