குட்நியூஸ்... செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா வெளியிட்ட அறிவிப்பில்;- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் 66வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெறவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி வருகின்ற 11.09.2023 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை வட்டங்கள், ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், இதரக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
school leave
உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 23ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.