தெப்பக்காடு யானைகள் முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படம் மூலம் பிரபலமடைந்த பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்துப் பேசினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படம் மூலம் பிரபலமடைந்த பொம்மன் - பெள்ளி தம்பதியைச் சந்தித்து உரையாடினார்.

தென்னகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குச் சென்றார். 20 கி.மீ. தொலைவுக்கு ஜீப் சவாரி மேற்கொண்ட அவர் வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ளநரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை பார்வையிட்டுவிட்டு சாலை மார்க்கமாக முதுமலைக்கு வந்தார்.

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி ஜீப் சவாரி

Scroll to load tweet…

தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தின் தோன்றிய பொம்மன் - பெள்ளி பாகன் தம்பதியைச் சந்தித்து உரையாடினார். அவர்களுடன் அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் வருகையால் அந்தப் பழங்குடி மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து புறப்பட்டு காரில் மசனகுடிக்கு சென்று, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கர்நாடகாவின் மைசூரு நகருக்குச் செல்கிறார். மைசூரில் நடைபெறும் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடுகிறார். இந்த விழாவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் 'புலிகள் திட்டம்' நினைவு நாணயமும் வெளியிடப்படும்.

Watch: முதுமலையில் யானைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி

பந்திபூர் புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமரின் வருகையை ஒட்டி கடந்த 3 நாட்களாக புலிகள் சரணாலயத்திற்குள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.