நீலகிரியில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டில் தனியாக இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி மல்லிகா தம்பதியினர். கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள பேக்கரியில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சந்தியா (வயது 25), ஸ்ரீநிதி (21) ஆகிய இரு மகள்கள் உள்ளனர், இந்நிலையில் ஸ்ரீநிதி கோவை யுனைடெட் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீநிதியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் ஸ்ரீநிதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதிய வேளையில் ஸ்ரீ நிதியின் தந்தை கணேசமூர்த்தி ஸ்ரீநிதிக்கு ஃபோன் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது நீண்ட நேரமாக போன் எடுக்காததால் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மகள் வீட்டில் உள்ளாரா என்று பார்க்க சொல்லி இருக்கிறார். அப்போது அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது வீட்டின் கதவு உள்ளே பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்
அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிய பொழுது நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் வீட்டின் ஜன்னல் வழியே பாத்துள்ளனர். அப்போது ஸ்ரீநிதி தனது வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக இது பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Breaking News : திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் காலமானார்
தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீ நிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஸ்ரீ நிதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.