நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

heavy rainfall alert from imd at nilgiris district upcoming 3 days vel

அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை மிகவும் தீவிரமடைந்து கனமழையாக பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள்  ஏற்பட்டு 240க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில மீட்பு குழுவினர் தொடங்கி தேசிய மீட்பு குழு, இராணுவம் உட்பட பல்வேறு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு 

இந்நிலையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைத்ததற்காக ட்ரீட் வைத்த இளம் பெண்; தோழியையே விருந்தாக்கிய நண்பர்கள்

மேலும் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று வெள்ளிக் கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios