வெளுத்து வாங்கி வரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட 4 தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை.. இன்று 2 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- இரவில் ஓயாத டார்ச்சர்.. கொதிக்கும் ரசத்தை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி.. வெந்த முகத்துடன் கணவர் செய்த காரியம்
மேலும் அந்த பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி உள்ளதை அடுத்து உடனடியாக மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி திடீர் தற்கொலை... இதுதான் காரணமா?