Asianet News TamilAsianet News Tamil

35 நாட்களில் 10 புலிகள் உயிரிழப்பு; நீலகிரியில் முகாமிட்டு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 35 நாட்களில் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

forest officers and environment activate start a investigation about tiger death in nilgiris vel
Author
First Published Sep 26, 2023, 12:07 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 35 நாட்களில் 6 புலி குட்டிகள் உள்பட 10 புலிகள் இறந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி சீகூர் பகுதியில் 2 புலி குட்டிகள் மர்மமாக இறந்தன. அதே போல ஆகஸ்ட் 17ம் தேதி நடுவட்டம் பகுதியில் 1 புலியும்,  ஆகஸ்ட் 31ம் தேதி முதுலையில் ஒரு புலியும், செப்டம்பர் 9-ம் தேதி அவலாஞ்சி பகுதியில் 2 புலியும்,  செப்டம்பர் 17-ம் தேதி சின்ன குன்னூரில் ஒரு புலி குட்டியும், செப்டம்பர் 19-ம் தேதி 3 புலி குட்டிகளும் இறந்துள்ளன. 

இதனிடையே புலிகள் காப்பகமான முதுமலையில் புலிகள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். தாய் புலியானது தனது குட்டிகளை விட்டு 200 மீட்டர் தூரம் கூட போகாது. இறந்த புலி குட்டிகளின் 2  தாய் புலிகளை இதுவரை வனத்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இதனால் தாய் புலிகள் வேட்டையாடப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தபட்டு வருகிறது. 

காவிரி விவகாரம்; சட்ட ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வேண்டும் - ஸ்டாலினுக்கு தினகரன் கோரிக்கை

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 35 நாட்களில் 10 புலிகள் மர்மமான முறையில் உயிர் இழந்தது குறித்த விசாரிக்க தேசிய புலிகள் ஆணைய குற்ற பிரிவு IG முரளிகுமார், மத்திய வன விலங்கு குற்ற தடுப்பு பிரிவு தென் மண்டல இயக்குனர் கிருபா சங்கர், மத்திய வன விலங்கு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ரமேஷ் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் உதகையில் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற தைரியமான முடிவை அதிமுகவால் மட்டும் தான் எடுக்க முடியும் - சீமான் புகழாரம்

6 குட்டி புலி குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தது எப்படி, அதற்கான காரணம், நீலகிரி மாவட்ட வன பகுதியில் இந்த ஆண்டில் இறந்துள்ள மொத்த புலிகள் இறப்பிற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உள்ளனர். அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த பின்னர்  சின்ன குன்னூர் பகுதியில் 4 புலி குட்டிகள் இறந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios