மலை ரயிலை வழிமறித்த காட்டு யானைகள்; சாதுர்யமாக ரயிலை பின்னால் எடுத்துச் சென்ற ஓட்டுநர்

உதகையில் மலை ரயிலை மூன்று காட்டு யானைகள் வழி மறித்ததால் ரயிலை பின்பக்கமாக செலுத்திய இஞ்ஜின் ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டார்.

forest elephants entered railway track in nilgiris

மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதிகளில் குறிப்பாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர் மலைப்பாதையில் வலம் வருவது வழக்கமாகி இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்பது காட்டு யானைகள் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டு ஒரு மாத காலமாக வனத்துறைக்கு சவால் விடுத்து வந்தன.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 5 காட்டு யானைகள் மீண்டும் மலை ஏறின. வனத்துறையினரின் கூட்டு முயற்சியால் இரண்டே நாட்களில் இந்த யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தி விடப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்றிரவு காட்டேரி பூங்கா பகுதிக்கு மேலும் மூன்று பெண் காட்டு யானைகள் புதிதாக வந்தன. இதையறிந்த குன்னூர் வனத்துறையினர் அதனை விரட்டச் சென்றனர். அப்போது, ரன்னிமேடு ரயில் நிலையம் பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று காட்டு யானைகளும் வனத்துறையினரை விரட்டின. 

நாகையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு? உறவினர்கள் வாக்குவாதம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 10:30 வந்தடையும். மலை ரயில் குன்னூர் நோக்கி ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வந்த மூன்று பெண் காட்டு யானைகளும் ரயிலை மறித்தன. ஆனால், ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி செலுத்தி சாதுர்யமாக செயல்பட்டார்.

சாலையில் நடந்து சென்ற முதியவர் கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

 இதற்கிடையே வனத்துறையினர் போராடி காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து, மலை ரயில் ரன்னிமேடு ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் மலை ரயில் சுமார் 30 நிமிடம் தாமதமானது. பின்னர் ரயில் குன்னூர் நோக்கி பயணித்தது. இந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு இது புது அனுபவமாக இருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios