காட்டு யானைகளை விரட்ட சென்ற விவசாயிகள்; விவசாயிகளை திருப்பி விரட்டிய காட்டு யானை..!!

நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை துரத்திய விவசாயிகளை காட்டு யானை ஆக்ரோஷமாக திருப்பி துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

forest elephant chases a farmers aggressively in nilgiris district vel

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் கெத்தை பகுதியில் இருந்து காட்டு யானைகள் மலை மாவட்டத்தை நோக்கி படை எடுத்துள்ளன,

அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மஞ்சூர் அருகே உள்ள கெத்தைப் பகுதியில் இருந்து இரண்டு குட்டிகளுடன் கூடிய 5 யானைகள் பழனியப்பா மாணார் கொலக்கம்பை மற்றும் தூதூர்மட்டம் பகுதியில் முகாமிட்டிருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கிழிஞ்சாடா பகுதியில் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.

சனாதனம் என்பது எந்த இடத்திலும் சமத்துவத்தை போதிக்கவில்லை -எம்.பி. திருமாவளவன் விமர்சனம்

இதனைத் தொடர்ந்து கிளிஞ்சாடா அருகே உள்ள சட்டன்  வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஐந்து யானைகளை விவசாயிகள் தீப்பந்தங்கள் மற்றும் பட்டாசுகளை வைத்து விரட்ட சென்றனர் அப்பொழுது  ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை ஒன்று விவசாயிகளை விரட்டியது மேலும் வனத்துறையினர் ஐந்து காட்டு யானைகளையும் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios