சனாதனம் என்பது எந்த இடத்திலும் சமத்துவத்தை போதிக்கவில்லை -எம்.பி. திருமாவளவன் விமர்சனம்

பாஜக எந்த முடிவை எடுத்தாலும் அதனை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருப்பதாக விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

sanathanam was not speak about equality in any place says mp thirumavalavan vel

சென்னை லயோலா கல்லூரியில் சமூகவியல் துறை சார்பில் நடைபெற்ற  கருத்தரங்கில் விசிக தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இது வழக்கத்திற்கு மாறானது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக 5 நாட்கள் இது நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை அனைத்து எதிர்க்கட்சி  மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நானும் பங்கேற்க உள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவை கொண்டு வர உள்ளனர் என பேசப்படுகிறது. இது ஆபத்தான  முயற்சி. இந்த முயற்சியை எப்படி முறியடிப்பது என்பது தொடர்பாக நாளை ஆலோசிக்கப்படும்.

ஆசை ஆசையாக திருமணத்திற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி; சோகத்தில் மூழ்கிய திருமண மண்டபம்

சனாதான ஒழிப்பு மாநாடில் நானும் பங்கேற்று இருந்தேன். தொற்று நோயை ஒழிப்பது போல சனாதானத்தை ஒழிப்பது தேவை என உதயநிதி பேசி இருந்தார். அவர் பேசியதை அகில இந்திய பிரச்சினையாக உள்துறை அமைச்சர் போன்றோரே பேசும் நிலை உருவாகி உள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. சனாதனத்தை ஒழிப்பது என்பது ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை எதிர்த்து பேசுவதாகும். இது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் எதிரானது என்பது போன்ற திரிபுவாதத்தை பொறுப்பில் உள்ள பதவியில் இருப்பவர்களே பேசுவது வியப்பாக இருக்கிறது. சனாதனம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ளாமல் அரசியல் ஆதாயத்திற்காக பேசுவதை விசிக கண்டிக்கிறது.

இது 100% திரிபு வாத அரசியல். சனாதனம் எந்த விதத்திலும் சமத்துவத்தை போதிக்கவில்லை. அவர்கள் நீதிமன்றத்திற்கு வரட்டும். அங்கு விவாதிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அது சனநாயகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும். அதிபர் ஆட்சி முறைக்கு வழி வகுத்துவிடும். அதிமுகவுக்கு வேறு வழி இல்லை. பாஜக எந்த முடிவு எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் அதிரடி கைது

எதிர்க்கட்சி ஒன்று சேராது என்று எண்ணிக்கொண்டு இருந்தவர்கள் 26 அணிகள் ஒன்று சேர்ந்ததை பார்த்து நடுக்கம் அடைந்து உள்ளனர். இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரித்து விட்டனர் என்ற காரணத்தால் பாஜகவினர் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து வருகிறார்கள். தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios