கர்ப்பிணியை 2 கி.மீ. தூக்கி சென்ற பொதுமக்கள்; பச்சிளம் குழந்தை உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலை வசதி இல்லாத காரணத்தால் 2 கி.மீ. தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டவளை பாரதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் நகர் புறத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் 2 கிலோ மீட்டர் ஒத்தையடி பாதையை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
இதனிடையே நேற்று பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த செளமியா (வயது 23) என்ற நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்ணை தூக்கிக்கொண்டு ஒற்றையடி பாதையில் சென்றனர். செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்து சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்தது.
டீ கடையில் டம்ளரில் தண்ணீர் குடித்த நரிக்குறவ மக்கள் மீது தாக்குதல்; காவல் துறையினர் வழக்கு பதிவு
பின்பு உடனடியாக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கர்ப்பிணி மற்றும் குழந்தை கொண்டு செல்லப்பட்டு விரைவாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். நீண்டகாலமாக பாரதிநகர் பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்து வருவதாகவும் இதுநாள் வரையில் தங்களுக்கான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
குற்றங்களை தடுப்பது மட்டும் காவலரின் பணியல்ல; குழந்தை கல்விக்காக குரல் SIக்கு முதல்வர் பாராட்டு
கோத்தகிரியை சுற்றியுள்ள பல கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் அவசர மருத்துவ தேவைகளுக்காக செல்ல முடியாத நிலை தொடர்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வட்டப்பாறை கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நோயாளியை கிராம மக்களே தொட்டில் கட்டி கரடு முரடான தேயிலை தோட்டங்கள் வழியாக தூக்கிச் சென்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் தற்போது கர்ப்பிணி அதே போன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.