Asianet News TamilAsianet News Tamil

டீ கடையில் டம்ளரில் தண்ணீர் குடித்த நரிக்குறவ மக்கள் மீது தாக்குதல்; காவல் துறையினர் வழக்கு பதிவு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே டீ கடையில் டம்ளரில் டீ குடித்ததற்காக நரிக்குறவ இன மக்கள் மீது கடைக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

In Cuddalore district, a youth who drank water at a tea shop was attacked by caste names
Author
First Published Apr 18, 2023, 3:44 PM IST

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் குப்பன். இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். இவர் விருத்தாசலத்தில் பணி முடித்துவிட்டு நேற்று மாலை சுமார் 3 மணியாளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது 5 வயது பேரன் சித்தார்துடன்  டீ குடிப்பதற்காக மங்களம்பேட்டையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். 

அப்போது அந்த சிறுவன் தண்ணீர் அருந்த கடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குடுவையில் தண்ணீர் பிடித்து வாய் வைத்து குடித்ததால் சிறுவன் சித்தார்த்தை திட்டியாதாகவும், அதனை தட்டிகேட்ட சிறுவனின் தாத்தாவை அங்கே அமறுவதற்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. 

திருச்சி ரங்கநாதருக்கு கிளி மாலையை சீர்வரிசையாக கொண்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகிகள்

இந்த தாக்குதலில் குப்பன் கையில் அடிபட்டு மங்களம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் கடையின் உரிமையாளர் அண்ணாதுரை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூப் பிரபலம், கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக ஒன்று திரண்ட சக கலைஞர்கள்

தமிழகம் முழுவதும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளில் தீண்டாமை உறுதிமொழி ஏற்க்கப்பட்டு இரண்டு தினங்கள்கூட ஆகாத நிலையில் மங்களம்பேட்டை டீ கடையில் நேர்ந்த சாதி தீண்டாமை  சம்பவத்தால் மங்களம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios