Asianet News TamilAsianet News Tamil

VIDEO | கூட்டம் கூட்டமாக உலா வரும் யானைகள்! கண்கொள்ளா காட்சி! - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

சாலை ஓரங்களில் குட்டிகளுடன் உலாவரும் காட்டு யானைகள், நூற்றுக்கணக்கான மான்கள் என ஆங்காங்கே தென்படுகிறது. பொதுமக்கள் யாரும் வனவிலங்குளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

Crowds of elephants and deer strolling! Spectacular view! - Forest department warning to the public!
Author
First Published Jun 10, 2023, 9:06 AM IST

முதுமலை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதிகள் பசுமைக்கு மாறிய நிலையில், கூட்டம் கூட்டமாக உலா வரும் வனவிலங்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. சாலை ஓரங்களில் குட்டிகளுடன் உலாவரும் காட்டு யானைகள், நூற்றுக்கணக்கான மான்கள் என ஆங்காங்கே தென்படுகிறது. பொதுமக்கள் யாரும் வனவிலங்குளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் பெய்த கோடை மழையால் முதுமலை வனப்பகுதி பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் உணவு மற்றும் தண்ணீர் தேடி முதுமலை வனப்பகுதிக்குள் வரத் துவங்கியுள்ளது.

இதனால் முதுமலை சாலை ஓரங்களில் குட்டிகளுடன் யானைக் கூட்டங்களை ஆங்காங்கே காண முடிகிறது. இதேபோல் நூற்றுக்கணக்கான மான்கள் சாலை ஓரங்களில் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மான்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போல் மாலை நேரங்களில் மயில்கள் சாலை ஓரங்களில் தோகை விரித்து நடனமாடும் காட்சி பார்ப்பவரை பரவசம் அடைய செய்கிறது.

என்ன தாண்டி போங்கடா பார்க்கலாம்..! ஒரு மணி நேரம் ஒரு வாகனத்தையும் அனுமதிக்காமல் சாலையை வழிமறித்த யானை!

தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் சாலை ஓரங்களில் அதிக அளவு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தாமல் செல்லுமாறும், புகைப்படங்கள் எடுத்து வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்லுமாறும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios