Asianet News TamilAsianet News Tamil

VIDEO:என்ன தாண்டி போங்கடா பார்க்கலாம்..! ஒரு மணி நேரம் ஒரு வாகனத்தையும் அனுமதிக்காமல் சாலையை வழிமறித்த யானை!

தமிழ்நாடு - கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை விரட்டும் குழுவினர் யானையை விரட்டிய பின் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
 

in gudalur area A wild elephant blocked the road without allowing a single vehicle for an hour!
Author
First Published Jun 9, 2023, 3:52 PM IST

தமிழ்நாடு - கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை விரட்டும் குழுவினர் யானையை விரட்டிய பின் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

தமிழ்நாடு - கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று இன்று காலை தேசிய நெடுஞ்சாலை நடுவே நின்றவாறு யாரையும் எதையும் பற்றியும் பொருட்படுத்தாமல் சாலையில் உலா வந்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த யானை சாலை நடுவே உலா வந்ததால் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணி வகுத்து நின்றது.



இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த யானை விரட்டும் குழுவினர், காட்டு யானையை வனப்பகுதிகள் விரட்டினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் போக்குவரத்து துவங்கியது. தமிழ்நாடு - கர்நாடகா தேசிய நெடுஞ்சாலையில் யானை சாலையை வழிமறித்த போது சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த வனத்துறையினர் யானை விரட்டிய சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios