அரசு பள்ளியை சீரமைக்க 2 கோடி, கார் பந்தயத்திற்கு 40 கோடி; திமுக விளாசிய நடிகை விந்தியா
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ.2 கோடியும், பார்முலா ஒன் கார் பந்தயத்தயம் நடத்துவதற்கு ரூ.40 கோடியும் ஒதுக்கீடு செய்தது தான் திமுக அரசின் சாதனை என நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து நடிகை விந்தியா இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் சிவம் தியேட்டர் பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் செய்த நடிகை விந்தியா, பல்வேறு அடுக்கு வசனங்கள் பேசி வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உயிரே போனாலும் நீட் தேர்வு ரத்து கிடையாது; அண்ணாமலையின் பதிலால் கூட்டணியில் சலசலப்பு
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த திமுக அரசு, ஃபார்முலா ஒன் கார் பந்தியத்திற்கு 40 கோடி ரூபாய் செலவு செய்கிறது. மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரனுக்கு 3 லட்சம் நிதி உதவி, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவனுக்கு 10 லட்சம் பணம் கொடுக்கும் அரசு திமுக என விமர்சனம் செய்தார்.
மோடியின் ரோஷோவை பார்க்கும் போது இறுதி ஊர்வலம் தான் நியாபகத்திற்கு வருகிறது - சி.வி.சண்முகம் கிண்டல்
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யுவோம் என கூறிய திமுக அரசு 50 லட்சம் கையெழுத்து வாங்கி அதனை குப்பையில் வீசியது. அத்துடன் மோடி ரோடு ஷோ பிரச்சாரம் செய்வது போல எடப்பாடி பழனிச்சாமி போவாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அதற்கு பதில் அளித்த விந்தியா, குரங்கு தான் குட்டி கரணம் அடிக்கும். சிங்கம் சிலிர்த்து தான் நிற்கும். கூட்டத்தை தேடி நாங்கள் போக வேண்டியதில்லை. நீங்கள் தான் கூட்டம் இருக்கும் இடத்திற்கு போக வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி கூட்டம் தானாக வரும். எனெனில் நாங்கள் சிங்கத்தாய் வளர்த்து எடுத்த பிள்ளைகள் என பேசினார்.