Watch : நட்டநடு சாலையில் ஆக்கரோஷமாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை! பதுங்கி பதுங்கி செல்லும் வாகனங்கள்!
குன்னூர் அருகே சாலையில் ஆக்ரோஷமாக வாகனங்களை மிரட்டும் ஒற்றை யானையால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். வாகனங்கள் பதுங்கி பதுங்கி அவ்விடத்தை கடந்து சென்றுவருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருந்து கோவை செல்ல கெத்தை மார்க்கமாக முள்ளி தோலம்பாளையம் காரமடை வழியாக காட்டுப்பாதை ஒன்று உள்ளது, இந்தப் பாதையில் அரசு பேருந்து ஒன்று மட்டுமே கோவையிலிருந்து மஞ்சுர் வரை செல்லும் மற்ற சமயங்களில் இச்சாலை வழியே பேருந்துகள் வருவதில்லை, இந்நிலையில் கேரளாவில் இருந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மஞ்சுர் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் குந்தா மஞ்சூர் போன்ற பகுதியில் இருந்து உள்ளூர்வாசிகள் கோயம்புத்தூர் செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே என் ஆர் மற்றும் மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை குட்டி சாலையில் வலம் வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யாணை குட்டி அனல் பறக்கும் வேகத்தில் சாலையில் அங்கும் இங்கும் ஆக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர் வனத்துறையினர் யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் யானையுடன் செல்பி எடுக்கவோ புகைப்படங்கள் எடுத்துவோ கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
யானைக்குட்டியின் தொடர் நடமாட்டத்தால் அப்பகுதியில் வாகனங்கள் பதுங்கி பதுங்கி சென்று வருகின்றன. வனத்துறையினரும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.