நீலகிரியில் கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  தயார் செய்யப்பட்டு பேரிடர் மீட்பு குழு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

A rescue team is on standby following the warning of heavy rains in Nilgiris district

வருகின்ற 4,5,6 ஆகிய நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கபட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 42 அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், 457 சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 283 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டரியபட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக சாலையில் முறிந்து விழும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பேரிடர் மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

ஹேர் கிளிப்பை விழுங்கிய குழந்தை; அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

அதன்படி குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஊராட்சிகள், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி மற்றும் அனைத்து பேருராட்சிகள் நகராட்சிகளிகளின்  பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பார்ஷா எந்திரம், ஒலிபெருக்கி, ஜே.சி.பி வாகனம், மணல் மூடைகள் ஆகியவை தயாராக உள்ளன. 

திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி பலி - மருந்தகத்திற்கு சீல் 

கூடலூர் பகுதிகளிலும் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் பிரவின் தலைமையில் 43 பேர் உதகை வந்துள்ளனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆலோசனை படி இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் மஞ்சூர் பகுதிக்கும், ஒரு குழுவினர் கூடலூர் பகுதிக்கும் புறப்பட்டுச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அதனை எதிர் கொள்ள  மாவட்டத்தில் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios