திருப்பூரில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட 16 வயது சிறுமி பலி - மருந்தகத்திற்கு சீல்

திருப்பூரில் மருந்துக்கடையில் பெற்றோர் வாங்கிக்கொடுத்த கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்ட 16 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

16 year old girl died while taking a abortion tablet in tirupur district

திருப்பூர் மாவட்டம் நல்லூர் முத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் கருகலைப்பு செய்ய முயன்ற பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருந்துக்கடையில் எந்த ஒரு மருத்துவரின் பரிந்துரை சீட்டும் இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி  கொடுத்துள்ளனர். 

இந்த மாத்திரையை சப்பிட்ட சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்ப்பட்டு கடுமையான வயிற்று வலியில் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடும் வயிற்று வலியால் கடந்த 27ம் தேதி உயிரிழந்தார்.

Thirupur

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முத்தன்னம் பாளையம் சாலையில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ திட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மாநகர நகர் நல அலுவலர் கெளரிசரவணன், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) கெளரி, மருத்துவ துறை இணைஇயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர்.
 
மாவட்ட மருந்துகள் ஆய்வாளர்கள் ராமசாமி, மஹாலட்சுமி, உமாமகேஸ்வரி தலைமையிலான குழுவினர் மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகள், இருப்பில்  வைக்கப்பட்டுள்ள மருந்துகள் குறித்து ஆய்வு செய்தனர். முறைகேடாக மருந்துகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து  மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தது எவ்வாறு? இதற்கு காரணமான நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios