டிஸ்னி உலகம், மலை ரயில் என காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் உதகை மலர் கண்காட்சி

உலக புகழ்பெற்ற உதகை 126வது மலர் கண்காட்சியை தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

126th flower show started today at ooty in nilgiri district

நீலகிரி மாவட்டம், உதகையில் உலக புகழ்பெற்ற 126 வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. மலர் கண்காட்சி வரும் 20ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

சுமார் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இம்முறை 126வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு 30 அடி உயரத்தில் பிரமாண்ட டிஸ்னி வோர்ல்டு, காளான், ஆக்டோபஸ் மற்றும் மலர் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களை கொண்டு அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

இதற்காக பெங்களூரு, ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. 126வது மலர் கண்காட்சியை கேரளா, கர்நாடகா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

2 வருசம் உருகி உருகி காதலிச்சிட்டு இப்போ அவ பின்னாடி சுத்துறியா? காதலனுக்கு தீ வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

இந்நிலையில் 126 ஆவது மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா,  தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஷிப்லாமேரி உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios