MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாகப்பட்டினம்
  • 2 வருசம் ஒன்னா சுத்திட்டு இப்ப ஆள மாத்துறியா? காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட கல்லூரி மாணவி

2 வருசம் ஒன்னா சுத்திட்டு இப்ப ஆள மாத்துறியா? காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட கல்லூரி மாணவி

2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : May 10 2024, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் (வயது 24). இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். 

35

அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிந்துஜா மயிலாடுதுறை பாலக்கரை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போதே ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். 

45

வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த ஆகாஷ் உடனடியாக இறங்கி ஓட முடியாததால் இருவரும் பலத்த தீ காயங்களுடன் கீழே விழுந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

55

ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருவரிடமும்  மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை  அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Recommended image2
நாகையில் கொளுத்தும் வெயில்; திடீரென மயங்கி விழுந்த பெண் - தவெக கூட்டத்தில் பரபரப்பு
Recommended image3
DSPக்கே பாதுகாப்பு இல்லையா? எனக்கு உயிர் முக்கியம்! DSP சுந்தரேசன் பகீர் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved