ஓடும் பேருந்தில் இறங்க சொன்ன நடத்துனர்? கீழே விழுந்த பள்ளி மாணவிக்கு தலையில் படுகாயம்.!
திம்மநாய்கன்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக குமரவேல் தனியார் பேருந்தில் மாணவி ஏறியுள்ளார். தேர்வுக்கு நேரமாகிவிட்டதால் பள்ளி அருகே பேருந்தை நிறுத்தும் படி நடத்துநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாமக்கல் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அரசு பள்ளி மாணவி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமராஜா. இவரது மகள் இனியாஸ்ரீ (15). திம்மநாய்கன்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக குமரவேல் தனியார் பேருந்தில் மாணவி ஏறியுள்ளார். தேர்வுக்கு நேரமாகிவிட்டதால் பள்ளி அருகே பேருந்தை நிறுத்தும் படி நடத்துநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், அவர் பேருந்து மெதுவாக செல்லும் போது இறங்கிகொள்ளும் படி கூறியுள்ளார். இதனையடுத்து, ஓடும் பேருந்தில் இறங்கிய இனியாஸ்ரீ கீழே தவறி விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இனியாஸ்ரீயின் சிகிச்சைக்காக 10,000 தருவதாக கூறிவிட்டு ததனியார் பேருந்து உரிமையாளர் இதனை தராமல் காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் சம்மந்தப்பட்ட தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.