நாமக்கலில் பள்ளி வளாகத்தில் உல்லாசமாக இருந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்துள்ள எஸ்.உடுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயராஜ் என்பவரும், ஆசிரியராக சரவணன் (35) என்பவரும் உள்ளனர். இப்பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பொறுப்பாளராக ஜெயந்தி (32) என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் ஜெயந்தி மற்றும் ஆசிரியர் சரவணன் இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில், தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இருவரையும் தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்தார்.

ஆனாலும், மீண்டும் அவர்கள் கழிவறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் திரண்டு வந்து ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்டர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசிரியரை தாக்கிய கிராம மக்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்நிலையில், மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் காரணமாகவும் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.