Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசின் திட்டம்-உயிர் பிழைத்த சிறுவன் முதல்வரிடம் பேச ஏக்கம்.. சர்ப்ரைஸ் தந்த ஸ்டாலின்.! உள்ளே வீடியோ..

சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில்,. முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கும் சென்றது. இதனையடுத்து அந்தச் சிறுவனுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்போனில் உரையாடினார்.

DMK government's plan-surviving boy longs to talk to the chief .. Stalin who gave a surprise.! Video inside
Author
Chennai, First Published Jan 21, 2022, 11:02 PM IST

நாமக்கல்லில் விபத்தில் சிக்கி மீண்ட சிறுவனுக்கு தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டது. உயிர்ப் பிழைத்த சிறுவன் முதல்வருக்கு நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்ற வீடியோ வைரலானது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் வர்ஷாந்த் சாலை விபத்தில் படுகாயமடைந்தான். அந்த சிறுவனை தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘இன்னுயிரைக் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் 48 மணி நேரத்தில் உயிர்க் காக்கும் சிகிச்சை அளிக்கும் திட்டத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவனுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்தனர். தற்போது குணமடைந்த நிலையில் வீட்டில் வர்ஷாந்த் ஓய்வு எடுத்து வருகிறான். இந்நிலையில், சிறுவன் வர்ஷாந்த் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான்."

அதில், “முதல்வர் ஐயாவை நேரில் பார்த்து நன்றி சொல்லணும். இரவு ஒரு ஏழரை மணி இருக்கும். லைட் இல்லாமல் வந்த வண்டி மோதிடுச்சு விபத்து ஆயிடுச்சு. என்னை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அப்புறம் தலையில் எனக்கு ஆப்ரேஷன் பண்ணாங்க.அதுல் ரத்தம் கட்டி மாதிரி இருந்துச்சு. அதை காட்டினாங்க. நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என்னை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி சொல்லிக்கிறேன். முதல்வர் ஐயாவை  நேரில் பார்த்து நன்றி சொல்லணும்.” என்று தெரிவித்திருந்தான் .அந்த வீடியோவில் சிகிச்சை அளித்த மருத்துவரும் பேசியிருந்தார். 

சிறுவனின் இந்த வீடியோ வைரலான நிலையில்,. முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கும் சென்றது. இதனையடுத்து அந்தச் சிறுவனுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்போனில் உரையாடினார். ” ஸ்டாலின் பேசுறேன் நல்லாயிருக்கியா  தம்பி” என்று சிறுவனிடம் கேட்ட முதல்வர், “வலி இருக்கா? தைரியமா இரு. மருந்து கொடுத்திருக்காங்களா? மருந்தையெல்லாம் கரெக்டா சாப்பிடுங்க. எதுவாக இருந்தாலும் மாவட்டச் செயலாளர் ராஜேஷிடம் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு சிறுவனின் தாயாரிடமும் முதல்வர் ஸ்டாலின் பேசினார். “ஸ்டாலின் பேசுறேன்ம்மா” என்ற முதல்வரிடம் ‘ நன்றிங்க சார்” என்று அந்தத் தயார் தெரிவித்தார். 

"

அதற்கு பதிலளிக்கும் முதல்வர், “ நன்றி இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் மாவட்டச்செயலாளரிடம் சொல்லுங்க. அவருடைய போன் நம்பரை வாக்கி  வைத்துக்கொள்ளுங்கள்” என்று முதல்வர் தெரிவித்தார். விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்து வருவோருக்கு முதல் 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அந்த நேரத்தில் சரியாக சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால், உயிரிழப்புக்கூட ஏற்பட்டுவிடும். அதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு, ‘இன்னுயிரைக் காப்போம்’ என்ற திட்டத்தை அறிவித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற இந்த ஏழைச் சிறுவனுக்கு மீண்டும் மறு வாழ்வு கிடைத்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios