Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடி தமிழகத்தில் வீடே எடுத்து தங்கினாலும் ஒரு சீட்டு கூட தேராது - அமைச்சர் உதயநிதி சவால்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் வீடே எடுத்து தங்கினாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 1 சீட்டு கூட வாங்க முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

bjp will not win single seat in lok sabha elections 2024 even though modi will stay in tamil Nadu said minister udhayanidhi Stalin vel
Author
First Published Apr 8, 2024, 10:05 AM IST

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பூங்கா சாலையில் திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நமது கூட்டணிக்கட்சி வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். நீங்கள் போட்டும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வேட்டாக அமைய வேண்டும் என்று கூறினார். 

ADMK : தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு வந்த சோக செய்தி.. மாஜி எம்எல்ஏ மறைவு- அதிமுகவினர் அதிர்ச்சி

நாமக்கல் சட்டமன்ற தொகுதிகளில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டார். தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை ஏமாற்ற மோடி சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வாக்குறுதி அளித்து உள்ளார். இதனை நிறைவேற்றறுவாரா? இதுவரை 8 கோடி பேர் இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்தி உள்ளனர். 3 லட்சம் பேர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து வாழ்த்திய தருமபுரம் ஆதீனம்

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலம் உள்பட கனடா நாட்டிலும் இதனை அமல் படுத்த உள்ளனர்.  மகளிர் உரிமை தொகை தகுதியான மகளிருக்கு உறுதியாக கிடைக்கும். மோடி தமிழகத்திலேயே தங்கினாலும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட் கூட வாங்க முடியாது. இது உதயநிதி சவால். மொழி உரிமை, கல்வி உரிமை பெற வேண்டும் என்றால் நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் 40க்கு 40 சீட் வாங்க வேண்டும். பாஜக அதிமுக இணைந்து தமிழகத்தின் உரிமைகளை பறித்து விடும் நிலையில் திமுகாவை ஆதரிக்க வேண்டும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios