Asianet News TamilAsianet News Tamil

நர்ஸ் என்ற பெயரில் ராட்சஸி... நிறம், தரம், எடை வாரியாக 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை..!

நாமக்கல் அருகே 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து செவிலியர் ஒருவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

baby Selling nurse... Shocking Audio
Author
Tamil Nadu, First Published Apr 25, 2019, 3:14 PM IST

நாமக்கல் அருகே 30 ஆண்டுகளாக குழந்தை விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து செவிலியர் ஒருவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 baby Selling nurse... Shocking Audio

நாமக்கல் மாவட்டத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றை வாங்கி வந்து, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யும் சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கும்பலுக்கு, விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சிடைய யெ்துள்ளது.  ஆண் குழந்தையின் அழகான தோற்றம், கலர் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறப்பட்டு வந்தது. baby Selling nurse... Shocking Audio

இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த செவிலியர், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும். குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த செவிலியரின் இந்த ஆடியோ பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. baby Selling nurse... Shocking Audio

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலார் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios