நாகூரில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் முகத்தில் பூட்ஸ் காலால் உதைத்து தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்து அந்த காவல் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். 

நாகூரில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் முகத்தில் பூட்ஸ் காலால் உதைத்து தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்து அந்த காவல் உதவி ஆய்வாளர் ஆயுத படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக எல்லையான நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள வாஞ்சூர் ரவுண்டானாவில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் அரசு பேருந்து மற்றும் இதர கனரக வாகனங்கள் அப்பகுதியில் வளைய முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றன.

இந்நிலையில் நேற்று இரவு தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென போலீசாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல், போராட்டம் நடத்திய ஆரோக்கியதாஸ் என்ற நபரை கடுமையாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். இந்த காட்சிகளை அங்கிருந்து பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே இதை அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், பூட்ஸ் காலால் உதைத்த நாகூர் காவல் உதவி ஆய்வாளர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.