Asianet News TamilAsianet News Tamil

நாகையில் காப்பக சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காப்பக நிறுவனர் கைது

நாகையில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காப்பக உரிமையாளரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The founder of the children home was arrested for sexually assaulting the girls of the orphanage in Nagai
Author
First Published Mar 16, 2023, 7:21 PM IST

நாகப்பட்டினம் புதிய கடற்கரை சாலையில் "நம்பிக்கை" என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை காரைக்கால் ஓ.என்.ஜி.சி உற்பத்தி பிரிவில் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சூடாமணி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த  காப்பகத்தில் பொருளாதரத்தில் நலிவுற்ற, தாய் தந்தை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட 15 பெண் குழந்தைகள், 15 ஆண் குழந்தைகள் தங்கியுள்ளனர். 

இந்நிலையில் அந்த காப்பகத்தில் தங்கி 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்தின் நிறுவனர் பரமேஸ்வரன் தன்னிடமும், காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடமும் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டதாகவும் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி

புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காலர்கள் பரமேஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த காப்பக நிறுவனர் பரமேஸ்வரன்  குழந்தைகள் காப்பக வளாகத்தில் இருந்த தனது வீட்டில் இருந்து குடும்பத்துடன் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த பரமேஸ்வரனை காவல் துறையினர் தேடி வந்தனர். 

இந்த நிலையில் துணை ஆட்சியர்  தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நம்பிக்கை குழந்தைகள்  காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுமிகளிடம்  விசாரணை மேற்கொண்டனர். இதில் பரமேஸ்வரன் சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் காப்பகத்திற்கு பணம் பெறுவதற்காக சிறுமிகளை பலிகடாவாக்கியதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

காதலிக்க மறுத்த பெண்ணை டீசல் ஊற்றி எரித்த கொடூரன்; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் நம்பிக்கை குழந்தைகள் காப்பகத்தில் சோதனை மேற்கொண்டு காப்பகத்தை இழுத்து மூடினர். இதையடுத்து தலைமறைவான  பரமேஸ்வனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வந்தது. 

இந்நிலையில்  நாகை அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த பரமேஸ்வரனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பகத்தில் இருந்த குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios