சட்டவிரோத மது கடத்தல்; ரூ.25 லட்சம் மதுபாட்டில்கள், சொகுசு கார் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் வழியாக முத்துப்பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகப்பட்டினம் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சோதனை சாவடியில் தனிப்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் மீன் பதப்படுத்தும் ஐஸ் பெட்டிகளுக்கு நடுவே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து உயர்தர மதுபானங்கள் பெட்டி, பெட்டியாக கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த சரக்கு வாகனத்தின் முன்பு பாதுகாப்புக்காக சொகுசு கார் ஒன்று சென்றதும் தெரியவந்தது.
ஆளுநர், முதல்வர் பிரச்சினையை ஓரங்கட்டுங்க; முதல்ல இதுக்கு தீர்வு சொல்லுங்க - அன்புமணி கோரிக்கை
தொடர்ந்து சரக்கு வாகன ஓட்டுநரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே டி.ஆர். பட்டினத்தை சேர்ந்த அரவிந்தன் (28) என்பதும், இவருக்கு பாதுகாப்பாக முன்னாள் காரில் சென்றவர் காரைக்காலை சேர்ந்த தமிழரசன் (35) என்பதும் தெரிய வந்தது. மேலும் காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை நூதன முறையில் சரக்கு வாகனத்தில் மீன் ஏற்றி செல்வது போல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
கோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் அதிரடி விசாரணை
இதையடுத்து அரவிந்தன், தமிழரசன் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், இவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், மது பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார், சரக்கு வாகனம், மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.