தேசப்பிதா மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கை மது ஒழிப்பு ஆகும். வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிரான தனது பிரச்சாரத்தை அவர் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். அவரின் அறிவுரைபடி பலர் மது அருந்துவதை கை விட்டிருந்தனர். அதனால் தான் அவர் பிறந்த மாநிலமான குஜராத்தில் இப்போதும் மதுவிலக்கு அமலில் இருக்கிறது.

இந்தநிலையில் தேர்தல் அரசியலை கடந்து, மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை , காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 முதல் மனிதநேய ஜனநாயக கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. தமிழ்நாடு முழுக்க நகரம், கிராமம் என "மதுவை ஒழிப்போம் - மனிதம் காப்போம்' என்ற டீ-ஷர்ட் அணிந்து மஜக தொண்டர்கள் பரப்புரை செய்து வருகிறார்கள்.

கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி வரும் அவர்கள் பள்ளிக்கூட மாணவர்களையும் சந்தித்து மதுவுக்கு எதிரான கருத்துகளை எடுத்துக் கூறி வருகிறார்கள்.

இதனிடையே வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில், பள்ளிக்கூடம் முடிந்து வெளியே வந்த மாணவர்களை சந்தித்த , மதுவுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கி, அவர்களை உறுதிமொழியும் எடுக்க செய்துள்ளனர்.

இதை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி விட்டு சென்றுள்ளனர்.