மயிலாடுதுறையில் அதிர்ச்சி.. கள்ளச்சாராயம் குடித்த 2 குடிமகன்கள் கண்பார்வை இழந்து துடிதுடித்து உயிரிழப்பு..!
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் கண்பார்வை இழந்து துடிதுடித்து உயிரிாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் கண்பார்வை இழந்து துடிதுடித்து உயிரிாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கள்ளச்சாராயம், சானிடைசர், தின்னர் உள்ளிட்டவைகளை குடித்து குடிமகன்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு (33) அச்சக தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் லோடுமேன் செல்வம் (36), வீராசாமி (52), சரத்குமார் (28) உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்திலேயே பிரபு, செல்வம் ஆகியோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 2 உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே, பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.