Asianet News TamilAsianet News Tamil

நாகையில் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம் பிடித்த பெண் சாராய வியாபாரி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து பெண் சாராய வியாபாரி ஓட்டம் பிடித்த நிலையில், அவரது வீட்டில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

illegal alcohol selling woman escaped in nagapattinam
Author
First Published Jan 25, 2023, 11:41 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது. மேலும் கிராமப் பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடைபெற்றது. 

வெளி மாநில மது விற்பனையை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக  மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தூத்துக்குடியில் மகள் காதல் திருமணம்; பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் உறவினர்கள் சோகம்

ரகசிய தகவலின் அடிப்படையில் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்; 2 மணி நேர திக் திக் பயணம்

இதையடுத்து அந்த வீட்டுக்கு  வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடினார். தொடர்ந்து காலணி வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த  1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் சரக்கு வாகனம் மூலம் நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய பெண் சாராய வியாபாரி ஆரோக்கிய மேரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios