பரம்பரை நோய்களை குணப்படுத்த முடியும்! - புதிய மருத்துவ சிகிச்சை முறைக்கு அனுமதிகேட்டு காத்திருக்கும் ஆசிரியர்!
அலோபதி மருத்துவ முறையில் குணமாக்க முடியாத சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பரம்பரை நோய்களை புதிய மருத்துவ சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும் என மருத்துவரும் ஆசிரியருமான ரவீந்திரன் தெரிவித்துள்ளார். தனது புதிய மருத்துவ சிகிச்சை முறைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த ரவீந்திரன் தனியார் பள்ளியில் 25 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், மருத்துவ முறைகள் மீது உள்ள ஈடுபாடு காரணமாக பல்வேறு புத்தகங்கள் மற்றும் இணைய வழியில் மருத்துவ குறிப்புகளை படித்து, புதிய மருத்துவ கோட்பாடு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள மருந்துகளுக்கு மாற்றாக சாய்பதி கோட்பாடு என்ற பெயரில் பௌதிகவியல், வானவியல் மற்றும் யோகா ஆகியவற்றை ஒன்றிணைத்து புதிய மருத்துவ முறையை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து நான்கு புத்தகங்களை எழுதி உள்ள இவர் தனது ஆராய்ச்சி குறிப்புகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவரது ஆராய்ச்சி குறிப்புகளை இயற்கை மருத்துவம் சார்ந்த துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் கடிதம் வந்துள்ளது.
தற்போதுள்ள அலோபதி உள்ளிட்ட மேல்நாட்டு மருத்துவ முறைகளால் பரம்பரை வழியே ஜீன்கள் மூலம் பரவும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆத்ரோகுளோரிஸ் உள்ளிட்ட நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது, என்றும் தனது புதிய மருத்துவ முறை மூலம் இந்த நோய்களை முற்றிலும் ஒழிக்க முடியும் என மருத்துவர் ரவீந்திரன் தெரிவிக்கிறார்.
இதனை சோதனை முயற்சியாக தனக்கு பயன்படுத்தி நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும். இதற்காக ஆறு ஆண்டுகள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், தனது சாய் பதி கோட்பாடுகளை ஆய்வு செய்து அதனை நிரூபிக்க தனக்கு மத்திய அரசு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தனது புத்தகங்களுக்கு காப்புரிமை வழங்க வேண்டும் என்றும் ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பில்லி சூனியம், புதையல் எடுப்பதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி; போலி சாமியார், மனைவி கைது