Tamilnadu Heavy Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதன் காரணமாக ஆறுகள், வாய்க்கால் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.  வெயில் காரணமாக பகலில் மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. 

Heavy Rain...Nagapattinam district schools holiday

நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவித்துள்ளார். 

வாட்டி வதைத்த கோடை வெயில்

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதன் காரணமாக ஆறுகள், வாய்க்கால் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.  வெயில் காரணமாக பகலில் மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பசலனம் காரணமாக கோடை வெயிலுக்கு மத்தியிலும் கோவை, நீலகிரி, நெல்லை, நாகை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Heavy Rain...Nagapattinam district schools holiday

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், அதிகாலை முதல் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக இன்று நாகை மாவட்டத்தில் உள்ள 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நாளை வரை மழை பெய்ய இருப்பதால் இந்த விடுமறை நீடிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். 

Heavy Rain...Nagapattinam district schools holiday

விவசாயிகள் மகிழ்ச்சி

எனவே காலை பள்ளிகளுக்கு செல்ல உள்ள மாணவ, மாணவிகள் எந்தவித சிரமத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க;- உஷார்..! தமிழகத்தில் கனமழை.. அடித்து ஊற்ற போகும் மாவட்டங்கள் எவையெவை..! வானிலை மையம் அப்டேட்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios