Tamilnadu Rain: வெளுத்து வாங்கும் கனமழை.. மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
வங்கக் கடல் பகுதியில் அந்தமான் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மெல்ல வலுப்பெற்று காற்று சுழற்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்கு நோக்கி காற்று சுழற்சி நகர்ந்து வந்தது.
தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.
வங்கக் கடல் பகுதியில் அந்தமான் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மெல்ல வலுப்பெற்று காற்று சுழற்சியாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக மேற்கு நோக்கி காற்று சுழற்சி நகர்ந்து வந்தது.
இதனால், கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியை நெருங்கிய நிலையில் கடலோரப் பகுதியில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டும் என ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.