நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெற்கு வீதி வசித்து வருவபவர் ராஜா. இவரது மனைவி ஈஸ்வரி (39). இந்நிலையில் நேற்று வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

நாகையில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணை பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டி தப்பிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் தெற்கு வீதி வசித்து வருவபவர் ராஜா. இவரது மனைவி ஈஸ்வரி (39). இந்நிலையில் நேற்று வீட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் வாசலில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஈஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பித்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் வெளிப்பாளையம் காவல்துறை தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஈஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்! 17 வயது சிறுவன் சரமாரி வெட்டி படுகொலை! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.